Sunday, December 5, 2010

எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் நலனுக்கு ரஜினி ரூ 50000 உதவி

கொடிது கொடிது இளமையில் வறுமை… அதனினும் கொடிது மழலையில் எய்ட்ஸ்… என்று புதிய மொழியே உருவாக்கும் அளவுக்கு, இன்று பிறக்கும்போதே எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகின்றனர் ஏராளமான குழந்தைகள்.
இவர்களில் 2500 பேரை தத்தெடுத்து, மருத்துவ உதவிகள் செய்ய பெற்றால்தான் பிள்ளையா என்ற மருத்துவ உதவித் திட்டத்தை ஆரம்பித்தது தினத்தந்தி குழுமத்தின் ஹலோ எப் எம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் மற்றும் சர்வதேச மக்கள் பணிகள் அமைப்பு.
கடந்த ஆண்டு 5000 பேர் ரூ 23 லட்சம் உதவி செய்தனர். இந்த வெற்றி தந்த தெம்பில் இந்த ஆண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
இம்முறை எய்ட்ஸ் பாதித்த 7000 குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்ய நிதி திரட்டுகிறார்கள். யார் வேண்டுமானாலும் உதவலாம்.
இதற்காக ரூ 50000 நிதியளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதற்கான காசோலையை நேற்று முன்தினம் பெற்றால்தான் பிள்ளையா அமைப்பின் நிர்வாகிகளுக்கு ரஜினி அனுப்பி வைத்தார்.
ரஜினியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவரான நிகில் இத்தகவலைத் தெரிவித்தார்.
நடிகர்கள் கமல்ஹாஸன், மாதவன், த்ரிஷா போன்றோரும் இந்த பெற்றால்தான் பிள்ளையா பிரச்சாரத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment